வேண்டுகோள்

அன்புடையீர்,

வணக்கம்.

திங்கள் தோறும் வெளிவரும் இம் மின்னிதழ், உலகெங்கணும் தமிழியல் துறைகளில்

ஆய்வு நிகழ்த்தும் ஆய்வாளர்கள், ஆய்வுத்துறையில் தடம் பதித்துள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களைச் சந்திப்பதற்குரிய மையமாக விளங்கும்.

,தமிழர்வரலாறு, பண்பாடு, நாகரிகம், மெய்யியல், கலைகள்,ஏனைய அறிதுறைகளில் தமிழர்தம் பங்களிப்பு ஆகியன குறித்த பல்துறைசார் ஆய்வுகளைத் தூண்டவும் தொல்காப்பியம்,சங்க இலக்கியம்,திருக்குறள் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்தவும்,பிழையான ஆய்வுப்போக்குகளை இனங்கண்டு எடுத்துரைக்கவும் இவ்விதழ் செயலாற்றும்.

தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுவது இதன் நோக்கமாக இருக்கும்.

பன்னாட்டு ஆய்விதழாக இம் மின்னிதழ் அமையும் வகையில் பல்வேறு நாடுகளில் பணியாற்றிவரும் அறிஞர் குழாம்,சிறப்பாசிரியர் குழுவாகச் செயற்படவுள்ளது.

முனைவர் சுப.திண்ணப்பன் ————சிங்கப்பூர்

புலவர் சீனி.நயினா முகம்மது————மலேசியா

முனைவர் பெஞ்சமின் லெபோ——–பிரான்சு

முனைவர்(திருமதி) இராசம் இராமமுர்த்தி—-அமெரிக்கா

முனைவர் வாசு அரங்கநாதன்——————-அமெரிக்கா

முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ—–இந்தியா

முனைவர் ந.தெய்வசுந்தரம்——————-இந்தியா

அனைத்து நாடுகளுக்கும் சார்பாண்மை விளங்குதற்கு வழிவகுக்கும் வண்ணம் இன்னும் பல அறிஞர்களுடன் தொடர்புகொண்டுவருகிறோம்.

எத்தகைய நிறுவனச் சார்புமற்ற இம் மின்னிதழ் பேராசிரியர் சி.இலக்குவனார் அறக்கட்டளையால் வெளியிடப் பெறுகிறது.

விளம்பரமோ நன்கொடையோ பொருளுதவியோ வேண்டியதில்லை.

செறிவும் செப்பமும் ஆழமும் அமைந்த ஆய்வுரைகளைத் தூண்டுவதே இம் மின்னிதழின் குறிக்கோள் ஆகும்.

புத்தம்புதிய கோணங்களில் ஆய்வுக் கட்டுரைகள் குவிந்திடுக!

மொழி, இலக்கியம்,கலை,வரலாறு,சமூகவியல்,மானிடவியல்,அறிவியல் என அனைத்துத் துறையிலும் புதிய தரவுகளும் கோட்பாடுகளும் தமிழாய்வுக்கு வளம் சேர்த்திடுக!

ஒன்றுபட்டுழைப்போம்! உயராய்வு வளர்ச்சிக்கு வழிவகுப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*